மலேசியாவில் புதிதாக 18 பேருக்கு நோய்த்தொற்று

மலேசியாவில் இதுவரை கொவிட்19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,634 ஆகும். இன்னும் 195 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்ராஜெயா, ஜூன் 28-

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 பேருக்கு கொவிட்19  நோய்த்தொற்று பரவியிருக்கும் நிலையில், 10 பேர் தொற்றிலிருந்து விடுபட்டு இல்லம் திரும்பியுள்ளனர்.

இன்று தொற்றினால் உயிரிழப்பு இல்லாத நிலையில், பலி எண்ணிக்கை 121ஆக நிலை கொண்டிருக்கிறது.

தற்போது இருவர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படவில்லை என சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 18 பேரில், நால்வர் வெளிநாட்டிலிருந்து தொற்றுப் பரவலுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்களில் மூவர் மலேசியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் திட்டம் சம்பந்தமாக அவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

இதற்கிடையில், இதர 14 பேர் அந்நிய நாட்டவர்களாவர். அவர்களுக்கு உள்நாட்டிலேயே தொற்று பரவியிருக்கிறது.

மலேசியாவில் இதுவரை கொவிட்19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,634 ஆகும். இன்னும் 195 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *