மலேசியாவில் இருவருக்கு நோய்த்தொற்று; 96.7 விழுக்காட்டினர் நலம்!

இதுவரை 8,354 பேர் (96.7 விழுக்காடு) முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியுள்ளனர்.

புத்ராஜெயா, ஜூன் 30-

மலேசியாவில் இன்று இருவருக்கு மட்டுமே கொவிட்19 நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், 20 பேர் அத்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 8,354 பேர் (96.7 விழுக்காடு) முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியுள்ளனர்.

இன்று உயிரிழப்பு இல்லை. தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 121ஆக நிலை கொண்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் நால்வர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் ஒருவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுவதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர், வெளிநாட்டிலிருந்து திரும்புகையில் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். உள்நாட்டவரான மற்றொருவர் சபாவிலுள்ள கோத்தா பெலுட் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, தொற்றுக்கு இலக்காகியிருப்பது தெரியவந்ததாக டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்.

அவ்விருவரும் மலேசியர்களாவர். இன்று அந்நிய நாட்டவர்களுக்கு தொற்றின் பாதிப்பு இல்லை என்று அவர் மேலும் சொன்னார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *