மீட்சி நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீறல்: 315 பேர் கைது!

மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்

பெட்டாலிங் ஜெயா, ஆக.2-

மீட்சி நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்திற்காக 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

“பொது நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த போது எஸ்.ஒ.பி.யை கடைபிடிக்காதவர்கள் 38 பேர், கூடல் இடைவெளியை பின்பற்ற முடியாத அளவில் பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்கள் 150 பேர், பொதுவில் முகக்கவசம் அணியாத 127 பேர் என மொத்தம் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தற்காப்பு துறை அமைச்சரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் எஸ்.ஒ.பி-யை பின்பற்றுவதை உறுதிச் செய்ய, காவல் துறையினர் 63,473 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகல் 14,327 பொது இடங்களில் சோதனை செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *