மலேசியாவில் இன்று 9 பேருக்குத் தொற்று!

அதிகரித்துள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா

புத்ராஜெயா, ஆக.1-

மலேசியாவில் இன்று 9 பேருக்குக் கொவிட்19 பெருந்தொற்று கண்டிருப்பதாகவும், மூவர் மட்டுமே இன்று அத்தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொற்றினால் உயிரிழப்பு இல்லை. இதுவரை மாண்டவர்களின் எண்ணிக்கை 125ஆக நிலை கொண்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது என்று சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மலேசியாவில் இதுவரை 8,985 தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 8,647 பேர் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இன்னும் 213 பேர் மருத்துவமனைகளில் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 9 பேரில், எழுவர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். அவர்களில் ஐவர் மலேசியர்கள்; இருவர் அந்நிய நாட்டவர்கள் ஆவர்.

தற்போது இரு தொற்று மையங்கள் உருவாகியுள்ளன. ஒன்று, சிவகங்கையிலிருந்து மலேசியா, கெடா மாநிலம் திரும்பியவரால் தொற்று பரவியிருக்கிறது. மற்றொருவர் அந்நிய நாட்டவர்; சிலாங்கூர் – புக்கிட் திராம் பகுதியில் தொற்று மையம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *