Wed. Sep 22nd, 2021
நாடாளுமன்றம்: அரசியல் உருமாற்றம் மற்றும் அதன் நிலைத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்டது
The government and Pakatan Harapan leaders have inked the memorandum of understanding (MOU) on bipartisan cooperation on Monday (Sept 13).Representatives from the government and the Opposition signed the historic document at a ceremony held at Parliament banquet hall at 5pm toda
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசும் நம்பிக்கை கூட்டணி கட்சியும் ஒன்றிணைந்து அரசியல் உருமாற்றம் மற்றும் அதன் நிலைத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுத் தேசிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.
இவ்வொப்பந்தம், கோவிட்-19 திட்டத்தை வலுப்பெற செய்தல், நிர்வாக உருமாற்றம் மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்தம் உள்ளிட்ட ஆறு கூறுகளைக் கொண்டிருப்பதாக நாட்டின் பிரதமர், டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்து அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மீட்புநிலை முயற்சிகள் முழுமையாகவும் சிறப்பாகவும் இயங்குவதை உறுதி செய்ய இயலும் என அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது.
நாட்டின் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில் அனைத்துத் தரப்பினரும் ஜனநாயக சிந்தனையைக் கடைபிடிக்க வெண்டுமென மாமன்னர் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மாற்றமானது கோவிட்-19 மற்றும் பொருளாதார மீட்சியை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த நிர்வாகத்திற்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், ஓர் உகந்த முதலீட்டுச் சூழலை ஊக்குவிக்கிறது. இதன்வழி, மலேசிய மக்களின் நல்வாழ்விற்கு வலுவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இயலும் என்று நம்பப்படுகின்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *