Wed. Sep 22nd, 2021
கோலாலம்பூரில் உள்ள ஜப்பானிய தூதரகம், மலேசிய ஊடகங்களுக்குத் தென்கிழக்கு ஆசியாவில் பயங்கரவாத சதி நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் தங்களின் அரசாங்கம் எச்சரிக்கை அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் வழிபாட்டுத் தளங்கள் அல்லது நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருக்குமாறு ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
பிரபலம் மிக்க வழிபாட்டுத் தளம் அல்லது மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவாளிகள் கணித்துள்ளதாகத் தோக்கியோவிலிருந்து நேரடி தகவல் பெறப்பட்டுள்ளது.
தற்போது வரை, ஏன் இம்மாதிரியான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன, எங்கு தாக்குதல்கள் நடைபெறும் போன்ற விவரங்கள் குறித்துத் தெளிவான விளக்கங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
நாட்டில் தற்போது 31,000 க்கும் மேற்பட்ட ஜப்பானிய குடியேறிகள் வசித்துவருவது குறிப்பிடத்தக்க

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *