Wed. Sep 22nd, 2021

கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) — அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறை எஸ்.ஒ.பி.யைப் பின்பற்றத் தவறும் பொதுமக்கள் குறிப்பாக பொது இடங்களில் பொழுப்போக்கு நடவடிக்கையில் ஈடுபவர்கள் மீது அரச மலேசிய போலீஸ் படை கடும் நடவடிக்கை எடுக்கும்.

நிலைமைக் கட்டுப்பாட்டை மீறி சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், நடவடிக்கை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என்று புக்கிட் அமான் பொது அமைதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் துணை இயக்குநர் டத்தோ மஸ்தோர் முஹமாட் அரிஃப் எச்சரித்திருக்கிறார்.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஓப் பாத்தோ (OP PATUH) சோதனை மூலம் ரேலா தரப்பினருடன் இணைந்து போலீசார் கட்டம் கட்டமாக கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்வர் என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம், தொடுகை இடைவெளியின்றி பொழுதுப்போக்கு நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டதை உட்படுத்திய காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டன.

வெள்ளிக்கிழமை தொடங்கி, கிள்ளான் பள்ளத்தாக்கு தேசிய மீட்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

— பெர்னாமா

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *