Wed. Sep 22nd, 2021

Economy

  • நியாயமான விலைகளுக்கு அப்பால் கோழி விலை உயர்ந்தால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    நியாயமான விலைகளுக்கு அப்பால் கோழி விலை உயர்ந்தால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    புத்ராஜெயா, 13 செப்டம்பர் (பெர்னாமா) — நியாயமான விலைகளுக்கு அப்பால் கோழி விலை உயர்ந்து கொண்டே இருந்தால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சு, கே.பி.டி.என்.எச்.இ.பி. மேற்கொள்ளும்.

    விலை உயர்வு ஏற்படும் இடங்கள் அல்லது பகுதிகளில் உள்ள கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வளர்ப்பவர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு, மொத்த மற்றும் சில்லறை வணிகர்களுக்கு அறிவிப்பு கடிதங்களை வழங்குவதன் வழியாக, கோழி விலை உயரும் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரு புதிய அணுகுமுறை செயல்படுத்தப் பட்டிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டெர் நந்தா லிங்கி தெரிவித்திருக்கிறார்.

    அந்த அணுகுமுறையின் வழி, வியாபாரிகள் பொருட்களின் விலை மற்றும் கொள்முதல் செலவுகளைச் சரிபார்த்து அதிக லாப வரம்பைப் பெறுவதை உறுதி செய்யலாம் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    கோழி வியாபாரிகள் சுயமாக விநியோகச் சங்கிலியின் எந்த நிலையிலும் விலையை உயர்த்தக் கூடாது எனும் எச்சரிக்கையாகவும் அந்த நடவடிக்கை அமையும் என்றும் அவர் கூறினார்.

    கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில், கோழி விலையில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அணுகுமுறையைப் பின்பற்றத் தவறும் வியாபாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலெக்சண்டெர் தெரிவித்தார்.

    — பெர்னாமா

Latest News

நியாயமான விலைகளுக்கு அப்பால் கோழி விலை உயர்ந்தால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

புத்ராஜெயா, 13 செப்டம்பர் (பெர்னாமா) -- நியாயமான விலைகளுக்கு அப்பால் கோழி விலை உயர்ந்து கொண்டே இருந்தால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சு, கே.பி.டி.என்.எச்.இ.பி. மேற்கொள்ளும். விலை உயர்வு ஏற்படும்...

எஸ்.ஒ.பி.யை மீறி பொது இடங்களில் பொழுப்போக்கு நடவடிக்கையில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) -- அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தரவிதிமுறை எஸ்.ஒ.பி.யைப் பின்பற்றத் தவறும் பொதுமக்கள் குறிப்பாக பொது இடங்களில் பொழுப்போக்கு நடவடிக்கையில் ஈடுபவர்கள் மீது அரச மலேசிய போலீஸ் படை கடும் நடவடிக்கை எடுக்கும்....

மலேசியா உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுப்ப

கோலாலம்பூரில் உள்ள ஜப்பானிய தூதரகம், மலேசிய ஊடகங்களுக்குத் தென்கிழக்கு ஆசியாவில் பயங்கரவாத சதி நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் தங்களின் அரசாங்கம் எச்சரிக்கை அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மலேசியா, இந்தோனேசியா,...

Perikatan, Pakatan sign historic bipartisan MoU in Parliament

நாடாளுமன்றம்: அரசியல் உருமாற்றம் மற்றும் அதன் நிலைத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்டது The government and Pakatan Harapan leaders have inked the memorandum of understanding (MOU) on bipartisan...