சென்னையில் கட்டுங்கடங்காமல் பரவும் கொரோனா: ஒரேநாளில் 40 பேர் உயிரிழப்பு!

ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ஜூன் 19-

சென்னையில் கொரோனா நோய்த்தொற்று கட்டுங்கடங்காமல் பரவிக்கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இதுவரை 19,600 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 முதியவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும் பலியாகி உள்ளனர். ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வருமாறு:

  • ராயபுரம் 5,828
  • தண்டையார்பேட்டை 4,743
  • தேனாம்பேட்டை 4,504
  • கோடம்பாக்கம் 3,959
  • அண்ணா நகர் 3,820
  • திருவிக நகர் 3,244
  • அடையாறு 2,144

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *