மதுரையில் முழு ஊரடங்கு அமல்


 

சென்னை, ஜூன் 22:

மதுரையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஜூன் 23ஆம் தேதி முதல் மதுரை நகரத்திலும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு மதுரை நகரிலும் அதனை ஒட்டியுள்ள பரவை உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளிலும் முழு ஊரடங்கை அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளிலும் பரவை டவுன் பஞ்சாயத்துப் பகுதியிலும் மதுரை கிழக்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் திருப்பரங்குன்றம் பகுதியிலும் ஜூன் 23ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி முதல் 30ஆம் தேதி நள்ளிரவுவரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின்போது சில அத்தியாவசியப் பணிகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *