வேகமாகப் பரவும் கொரோனா: திணறுகிறது அமெரிக்க, மீண்டும் கட்டுப்பாடுகள்

 

லண்டன், ஜூன் 29:

கொரோனா வைரஸ் தொற்று சில தளர்வுகளுக்குப் பின் வேகமாகப் பரவத் தொடங்கியதையடுத்து, அமெரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கொரோனாவால் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஃப்ளோரிடா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அண்மையில் தென் மாநிலங்களில் தளர்த்தப்பட்டதோடு, வணிக நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனையடுத்து அங்கு மீண்டும் வேகமாக கொரோனா பரவத் தொடங்கியது.

கடந்த சில தினங்களில் மட்டும் ஃப்ளோரிடா மாநிலத்தில் கொரோனாவால் 9,500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பதிவாகியது. இதனையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *