இந்திய நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல்!

ஜூலை மாதத்தில் இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும் எனத்தெரிகிறது.

புதுடெல்லி, ஜூன் 30-

கொரோனா நோரய்க்கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பக் கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக இந்தியா கண்டுபிடித்துள்ள முதல் தடுப்பு மருந்தான COVAXINE  விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி பெற்றதால் மனிதர்களிடம் கண்டுபிடிக்க  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.

ஜூலை  மாதத்தில் இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும் எனத்தெரிகிறது.

ஐசிஎம் ஆர் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பயோடெக் என்ற நிறுவனம் கோவக்சைன் மருந்தை கண்டறிந்துள்ளது. மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்திற்கு உலகம் நகரும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *