துணைப் பிரதமராக முக்ரிஸ்: மகாதீர் பரிந்துரைக்கவில்லையாம்!

என் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மற்றவர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த விரும்பவில்லை என மகாதீர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29-
இரண்டாம் துணைப் பிரதமராக டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் பெயரைத் தாம் பரிந்துரைக்கவில்லை என துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

அமானா கட்சியின் தலைவர் முகமட் பின் சாபுவும், ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் கடந்த ஜூன் 22ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் தமது மகன் முக்ரிசின் பெயரை பரிந்துரை செய்தனர் என முன்னாள் பிரதமரான அவர் விவரித்தார்.

இந்தப் பரிந்துரைத் தொடர்பாக நிச்சயம் விமர்ச்சிக்கப்படுவேன் என்பது குறித்தும் அவர் சுட்டிக் காட்டினார்.

முதன் முறையாக பிரதமர் பதவி ஏற்றபோது, எனது மகன் எந்தவொரு அரசாங்கப் பணியில் இருக்க அனுமதிக்கவில்லை. என் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மற்றவர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த விரும்பவில்லை என்பதையும் மகாதீர் விவரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *