மலேசியாவில் இன்று 14 பேருக்குத் தொற்று!

சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா.

புத்ராஜெயா, ஆக.2-

மலேசியாவில் இன்று தொற்றுக் கண்டோரின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்திற்குக் கூடியுள்ளது. நேற்று 9 பேர் தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில், இன்று அதன் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

மற்றொரு நிலவரத்தில், 17 பேர் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர்.

இன்ரு உயிரிழப்பு இல்லை. இதுவரை மாண்டவர்களின் எண்ணிக்கை 125 ஆகும்.

தீவிர அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக இருவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது என்று சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *