அடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு!

இன்று, மலேசியாவிற்கு சிறந்த நாள். இன்று ஒரேயொரு கொவிட்19 நோய்த்தொற்றுப் பரவல் சம்பவம் பதிவாகி இருக்கிறது. உள்நாட்டினரை உட்படுத்திய சம்பவம் பதிவாகவில்லை.

புத்ராஜெயா, ஜூலை 2-

நாட்டில் தொடர்ந்து 28 நாட்களுக்கு, புதிய பெருந்தொற்றுப் பரவல் எண்ணிக்கையை சுழியமாக நிலைநிறுத்த சுகாதார அமைச்சு இலக்கு  கொண்டுள்ளது.

இது தொடர்பாக, சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

இன்று, மலேசியாவிற்கு சிறந்த நாள். இன்று ஒரேயொரு கொவிட்19  நோய்த்தொற்றுப் பரவல் சம்பவம் பதிவாகி இருக்கிறது. உள்நாட்டினரை உட்படுத்திய சம்பவம் பதிவாகவில்லை.

இது ஒரு நல்ல தொடக்கமாகும். எனினும், தொடர்ந்து 28 நாட்களுக்கு புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதே முக்கியமாகும்.

மக்கள் அனைவரும் எஸ்.ஒ.பி. எனப்படும் செயல்பாட்டு தர விதிமுறையை முழுமையாகப் பின்பற்றினால் இது சாத்தியமாகும் என்று டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

ஜூலை 15ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படவிருப்பதைத் தொடர்ந்து, மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.பி) தொடரப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது டாக்டர் நோர் ஹிஷாம் இவ்வாறு குறிப்பிட்டார்.

அனைத்து துறைகளும் குறிப்பாக கல்வித்துறையைத் திறப்பதும் உள்நாட்டில் இந்நோய்ப் பரவாமல் கண்காணிப்பதுமே இந்த பி.கேபி.பி காலகட்டத்தில் சுகாதார அமைச்சின் இலக்காகும்.

எனவே, சுகாதார அமைச்சு, பள்ளிகளைக் கண்காணிப்பது, இந்நோய்ப் பரவியதாக அடையாளம் காணப்பட்ட இடங்களை மூடுவது, பரிசோதனை மேற்கொள்ளாதது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *