டத்தோஸ்ரீ ஆறுமுகம் படுகொலை சம்பவம்: விக்னேஸ்வரர் போலீசில் சரண்!

கொலையுண்ட டத்தோஸ்ரீ ஆறுமுகம்

ரவாங், ஜூன் 30-

பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தி படுகொலைச் செய்யப்பட்ட சமபவம் தொடர்பாக, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த விக்னேஸ்வரர் நாகேந்திரன், ரவாங் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இன்று ஜூன் 30ஆம் தேதி தொடங்கி, ஜூலை 6ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு போலீஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் அனுமதியை, போலீஸ் தரப்பு பெற்றுவிட்டதாக சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு துறை தலைவர் ஃபாட்சில் அஹ்மாட் தெரிவித்தார்.

அண்மையில், இங்குள்ள பத்து 27, ஜாலான் ரவாங் பிஸ்தாரி ஜெயாவில், டத்தோஸ்ரீ ஆறுமுகத்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டது முதல், இதுவரை 9 ஆடவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.

டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சில ஆடவர்கள் சிக்கியப் பின்னரே, அந்த தொழிலதிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

5 கோடி சிங்கப்பூர் டாலர் பிணைப் பணத்துக்காக கடத்தப்பட்ட டத்தோஸ்ரீ ஆறுமுகம், பின்னர் மாண்ட நிலையில்தான் மீட்க்கப்பட்டார். அவருக்கு நெருக்கமானவர்களால்தான் இந்த கொடூரக் கொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகிக்கிறது. இது தொடர்பான புலன் விசாரணையை, போலீஸ் பல கோணங்களில் தொடங்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *