கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன்

சென்னை, ஜூன் 20-

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ கடந்து உள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழந்து உள்ளனர். புதிதாக 2,141 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.  இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேரும் என மொத்தம் 49 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு 625 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று விடுத்து உள்ள செய்தியில், வெளிப்படையின்றி செயல்பட்டதால்தான் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது.  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமையாகும் என தெரிவித்து உள்ளார்.  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *